Skip to main content

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா!!

 

Corona to DMK General Secretary Duraimurugan !!

 

இந்தியாவில் கரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் தற்போது அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்கள் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. 

 

தமிழகத்திலும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னையில் பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் கூடுதல் முகாம்கள் நடத்த மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துரைமுருகன் 2வது டோஸ் கரோனா தடுப்பூசியும் போட்டுக்கொண்ட நிலையில், அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு தற்போது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !