தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 310 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் மொத்தம் 5,947 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் 6 ஆயிரத்தை நெருங்குகிறது கரோனா பாதிப்பு. கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 500க்கு மேல் இருந்த நிலையில், தற்போது இரண்டாவது நாளாக கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 500 க்கும் குறைவாக உள்ளது.
தமிழகத்தில் தற்போது வரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,108 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கையானது 66 ஆக இருந்த நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் கரோனாவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 359 பேர் கரோனாவிருந்து குணமடைந்திருக்கின்றனர். இதனால் தமிழகத்தில் 2,599 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடலூரில் இன்று ஒரே நாளில் 214 பேர் கரோனாவிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.