Fewer corona cases in Chennai after 7 days- today's corona situation!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக அதிகரித்து பதிவாகி வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல மாவட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,765 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 2,722 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,378 இருந்து 18,687 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,413 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இன்று உயிரிழப்பு பதிவாகாததால் இதுவரை தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38,028 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 930 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 1,011 பேருக்கு கரோனா பதிவு செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மட்டும் ஏழாவது நாளாக கரோனா பாதிப்பு 1,000 என்று பதிவாகி இருந்த நிலையில் இன்று ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. செங்கல்பட்டில்-474 பேருக்கும், கோவை-131, குமரி-52, திருவள்ளூர்-191, விருதுநகர்-54, காஞ்சிபுரம்-87, விழுப்புரம்-43, நெல்லை-87, தூத்துக்குடி-57, திருச்சி-73, ராணிப்பேட்டை, தென்காசியில் தலா 32 பேருக்கு என கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.