Skip to main content

ஈரோட்டில் மீண்டும் ஒருவருக்கு கரோனா!!!

Published on 28/05/2020 | Edited on 28/05/2020
Corona is back for erode

 

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆக இருந்தது. இதில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து 69 பேர் சிகிச்சை பெற்று, அதில் அனைவரும் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புதியதாக கரோனா தொற்று எதுவும் இல்லாமல் இருந்ததையடுத்து ஈரோடு பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்தநிலையில் சென்ற வாரம் சென்னையிலிருந்து வந்த, கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று மீண்டும் கொடுமுடியை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் பணியாற்றி வந்தார். கரோனா ஊரடங்கு காரணமாக அவர் அங்கேயே தங்கி இருந்தார். பிறகு அவர் சொந்த ஊர் திரும்புவதற்காக அனுமதி கேட்டு விண்ணப்பித்ததால் அம்மாநில அரசு தமிழகம் செல்ல அனுமதி வழங்கியது.

அங்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அதில் கரோனா தொற்று எதுவும் இல்லை என்பது உறுதியானதையடுத்து, அவர் நேற்று முன்தினம் மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்துள்ளார். பிறகு அங்கிருந்து கோவை விமானநிலையத்திற்கு வந்த அந்த நபரின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்து விட்டு அவர் சொந்த வீட்டில் தனிமைபடுத்திக்கொள்ள அறிவுறுத்தினர்.

 

 


வீட்டில் தனி அறையில் இருந்த அந்த நபரின் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி அந்த நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இன்று மதியம் ஈரோடு சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நபரின் வீட்டிற்கு சென்று சிகிச்சைக்காக, ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.