Continuing shock ...  soft drink incident

திருவள்ளூர் மாவட்டம் மணலியில் குளிர்பானம் அருந்திய பெண் உயிரிழந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

செல்வி என்ற52 வயது மதிக்கத்தக்கப் பெண் வயிற்றுவலி காரணமாகக் குளிர்பானம் ஒன்றை வாங்கி குடித்ததாகக் கூறப்படும் நிலையில், சிறிது நேரத்தில் மயக்கமடைந்த செல்வி வாயில் நுரைத்தள்ளிஉயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி சென்னை பெசன்ட் நகரைச் சேர்ந்த சதீஷ், காயத்ரி தம்பதியினரின் இளையமகள் தாரணி வீட்டின் அருகிலுள்ள மளிகைக் கடையில் குளிர்பானம் மற்றும் ரஸ்னா வாங்கி குடித்த நிலையில் குளிர்பானத்தைச் சிறுமி குடித்த சிறிது நேரத்தில் வாந்தி ஏற்பட்டதோடு மூக்கில் சிவப்பு நிற சளி வந்ததைக் கண்டு சிறுமியின் சகோதரி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து மயங்கி விழுந்த சிறுமியின் உடல் நீல நிறத்தில் மாற உடனே, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

Continuing shock ...  soft drink incident

அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்புசென்னைபுதுவண்ணாரப்பேட்டையைச்சேர்ந்த குமார் என்பவரின் 6 வயது மகன்லக்ஷ்மன்சாய். அவரது வீட்டிற்கு அருகே உள்ள கடையில் குளிர்பானம் ஒன்றை வாங்கிக் குடித்த நிலையில் குளிர்பானத்தைக் குடித்த சிறுவன் சாய் உடனடியாக மயங்கி விழுந்ததோடு இரத்தவாந்தியும் எடுத்தார். இதனால் அச்சமடைந்த பெற்றோர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment