Skip to main content

நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? -கடிதம் எழுதிய நீதிபதி...

Published on 14/09/2020 | Edited on 14/09/2020
kl;

 

 

நீட் தேர்வு பயத்தில் 3 பேர் தமிழகத்தில் உயிரிழந்த நிலையில், நடிகர் சூர்யா இதுகுறித்து அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். 

 

அந்த அறிக்கையில், முன்னேறுகிறவர்களை பலியிட நீட் போன்ற வலிமையான ஆயுதங்களை வைத்து இருக்கிறார்கள். அப்பாவி மாணவர்களின் மரணங்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. சாதாரண குடும்ப பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கும் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்புவோம். 

 

நீட்தேர்வு பயத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது மனசாட்சியை  உலுக்குகிறது. தேர்வு எழுத போகும் மாணவர்களுக்கு வாழ்த்து கூறுவதற்கு பதிலாக ஆறுதல் சொல்வதை போல் அவலம் எதுவுமில்லை. கரோனா காலத்தில்கூட மாணவர்கள் தேர்வு எழுதிதான் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவதுதான் வேதனை. நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. உயிருக்கு பயந்து காணொளி காட்சி மூலம் வழக்குகளை நடத்துகின்ற நீதிமன்றங்கள் கூட மாணவர்களை பயப்படாமல் தேர்வெழுத போகச் சொல்கிறது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கருத்து தொடர்பாக சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியன் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கங்குவா’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Release of the second look poster of the movie 'Kangua'

சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 10 மொழிகளுக்கு மேலாக 3டி முறையில் சரித்திரப் படமாக வெளியாக உள்ள இப்படத்தை, ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் வெளியாகவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  

இப்படத்தின் படப்பிடிப்பு கோவா, கொடைக்கானல், உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து தாய்லாந்தில் நடந்ததாகத் தகவல் வெளியானது. இதையடுத்து சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி ரோப் கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் மோதியதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, விபத்து குறித்து விளக்கமளித்த சூர்யா, உடல் நலம் தேறி வருவதாகவும், உங்கள் அன்புக்கு நன்றி எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதாராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. இது குறித்து நடிகர் சூர்யா தனது எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் குறிப்பிடும்போது, ‘இந்த படத்தை நீங்கள் திரையில் பார்க்கும் வரை என்னால் காத்திருக்க முடியாது’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பொங்கல் தினத்தை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டரை வெளியிடுவதாக நேற்று (15-01-24) படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று (16-01-24) கங்குவா படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா இடம்பெற்ற இந்த போஸ்டரால் ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. 

Next Story

சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்; பரிதாபமாக உயிரிழந்த 2 ரசிகர்கள்

Published on 23/07/2023 | Edited on 23/07/2023

 

Suriya's two fans lost their lives

 

சூர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இரு ரசிகர்கள் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவிற்குத் தமிழ் மொழியைத் தாண்டி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா எனத் தென்னிந்திய மாநிலங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் கேக் வெட்டி, அன்னதானம், உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும், சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது. 

 

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவரது ரசிகர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காகப் பேனர் கட்டும்போது இரும்பு கம்பி அருகிலிருந்த மின்கம்பி மீது உரசியதில் மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்களான வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.