கஜா புயல் தொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் தனது டுவிட்டர் பக்கத்தில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதில், கஜா புயல் நாளை மறுதினம் கடலூர் மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளதையடுத்து அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு மீட்பு படைகள் தயார் நிலையில் உள்ளன.

Advertisment

கடலூர் மாவட்ட மக்கள் புயல் தொடர்பாக அனைத்து வித உதவிகளுக்கும் எந்நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். முன்னெச்சரிக்கையோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து புயலை பாதுகாப்பாக எதிர்கொள்வோம்.

கடலூரில் புயல் கடக்கும் சமயத்தில், வாகன ஓட்டிகள் முடிந்த அளவு வாகனங்கள் இயக்குவதை தவிர்த்தும், பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்த்தும் இல்லங்களிலோ அல்லது பாதுகாப்பான இடங்களிலோ தங்கியும் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Advertisment