
ஐந்தாயிரம் ரூபாய் கடன் கொடுத்துவிட்டுத்திருப்பிக் கேட்ட நபரைக் கடன் வாங்கியவர் கொலை செய்த சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சீர்காழியில் கட்டடத் தொழிலாளி முருகன் என்பவரின் சடலம் சாலையோரம் கிடந்தது. கொலை செய்யப்பட்டு அவர் வீசப்பட்டிருப்பதாகப் போலீசுக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கட்டடத் தொழிலாளி முருகனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதேநேரம் வேறொரு வழிப்பறி வழக்கில் ராஜகோபால் என்பவரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது, முருகனிடம் ஐந்தாயிரம் ரூபாய் கடன் பெற்ற நிலையில் திரும்பிக் கேட்டதால் கொன்றதாக ராஜகோபால் வாக்குமூலம்அளித்துள்ளார். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கைது செய்யப்பட்ட ராஜகோபால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)