Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; கதறி அழும் காவலரின் மனைவி

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

 

constable wife complained of beaten in Karur

கரூர் மாவட்டம் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் லதா. இவரும் அதே பகுதியை சேர்நத சரவணன் என்பவரும் ஒருவரை ஒருவர்  காதலித்து 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். திருமணமான இரண்டு வாரங்களில் சரவணனுக்கு காவலர் வேலை கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மணப்பாறைக்கு பணிமாறுதல் பெற்றுள்ளார். அப்போது மணப்பாறையை சேர்ந்த அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வரும் சுபாஷினி(45) என்பவருடன் சரவணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணத்தை மீறிய தொடர்பாக மாறியுள்ளது. 

 

இதனையறிந்த லதா, தனது கணவர் சரவணனிடம் சுபாஷினியுடனான தொடர்பை முறித்துகொள்ளும் படி கூறியுள்ளார். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாமல் சரவணன் தினமும் குடித்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால்  மனமுடைந்த லதா கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை போலீஸில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் சரவணனும் காவலர் என்பதால் புகார் மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில், லதா தனக்கு நியாயம் கேட்டு கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இரண்டு குழந்தைகளை வைத்துகொண்டு சிரமப்பட்டு வருகிறேன். எனது கணவர், சுபாஷினியின் தூண்டுதல் பேரில் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துகிறார். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தால், சரவணன் காவலர் என்பதால் அவர்களும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் எந்தப் பலனும் இல்லை. இதனால் காவல் நிலையத்துக்கு ஏறி இறங்கியது தான் மிச்சம். பல்வேறு இடங்களில் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நியாயம் கேட்டு இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்” என்றார். மேலும், தனக்கும், தனது குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கதறி அழுதார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை; காவலர் கைது!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Mayiladuthurai Dt Perambur Police Station constable Thirunavukarasu incident

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் திருநாவுக்கரசு. இவர் அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து சென்னையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது.

இதனையடுத்து காவலர் திருநாவுகரசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவலர் திருநாவுக்கரசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

ரவுடி திருவேங்கடத்தின் உடல் இன்று ஒப்படைப்பு!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
chennai thiruvenkadam Handover incident 

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தப் போது நேற்று (14.07.2024) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யவும், உடலை பெற்றுக்கொள்ளவும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிபதி தீபாவும், காவல்துறையினரும் நேற்று இரவு திருவேங்கடத்தின் குடும்பத்தினரிடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து திருவேங்கடத்தின் உறவினர் பிரேதப் பரிசோதனை செய்ய சம்மதம் தெரிவித்தனர். 

chennai thiruvenkadam Handover incident 

இதனையடுத்து அவரது உடல் நேற்று இரவு 10.30 மணி முதல் 12.00 மணி வரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் குடும்பத்தினரிடம் சிறிது நேரத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும் திருவேங்கடத்தின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படாமல் சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி திருவேங்கடத்தின் உறவினர்கள் இறுதி சடங்கிற்கு பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.