Skip to main content

போக்சோவில் சிக்கி தப்பி ஓடிய காவலர் மீண்டும் கைது

 

Constable who escaped after being caught in POCSO arrested again

 

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சிறுமி ஒருவரை கர்ப்பமாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட காவலர் ஒருவர் காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய மீண்டும் அந்த காவலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

பெரம்பலூரில் வசித்து வந்த பிரபாகரன் என்ற காவலர் சொந்த ஊரான திருவாச்சிக்கு சென்றுள்ளார். அப்போது 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கியுள்ளார் காவலர் பிரபாகரன். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவலர் பிரபாகரன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென காவல் நிலையத்திலிருந்து ஓட்டம் பிடித்த பிரபாகரன் வெளியில் ஹெல்மெட் அணிந்தபடி இரு சக்கர வாகனத்தில் காத்திருந்த நண்பர் உடன் ஏறி தப்பித்தார். இந்த காட்சிகள் காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

 

நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முயன்ற நிலையில் தப்பிச் சென்ற காவலர் பிரபாகரனை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !