Published on 23/08/2021 | Edited on 23/08/2021

தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கொடநாடு கொள்ளை, கொலை வழக்கு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கொண்டுவரும் இந்த தீர்மானத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொடநாடு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே அதிமுக இரண்டு நாட்கள் சட்டப்பேரவை நிகழ்வைப் புறக்கணித்திருந்த நிலையில், இந்தக் கவன ஈர்ப்புத் தீர்மானம் அக்கட்சியை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.