Skip to main content

தி.மு.க குடும்ப அரசியல் பற்றி கேள்வி எழுப்பாதது ஏன்? - கார்த்தி சிதம்பரம் எம்.பி கேள்வி!

Published on 17/11/2020 | Edited on 17/11/2020

 

congress party mp karthi chidambaram press meet at pudukkottai district

 

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி கார்த்தி சிதம்பரம், "தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளிடம் குடும்ப அரசியல் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? குடும்ப அரசியல் குறித்து காங்கிரஸ் கட்சியிடம் மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? பல மாநிலங்களில் முக்கியத் தலைவர்களின் வாரிசுகளே அடுத்தடுத்து பதவிகளுக்கு வருகின்றனர்.

 

பீகார் தேர்தல் முடிவுகளை வைத்து தமிழகத்தில் தேர்தல் சூழலைக் கணிக்க முடியாது. பீகார் நிலவரம் வேறு; தமிழக நிலவரம் வேறு; தி.மு.க.வை தமிழகத்தில் ஆட்சியில் அமர்த்துவோம். எதிர்க்கட்சிகள் அஞ்சுவதற்கு அமித்ஷா ஒன்றும் சர்வாதிகாரி அல்ல." என்றார்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்கள் சந்திப்பு (படங்கள்)

Published on 11/03/2024 | Edited on 11/03/2024

 

சிவகங்கை மக்களவை தொகுதி உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் இன்று (11-03-24) காலை 11:30 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அவருடன் தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத் துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் பங்கேற்றார். 
 

Next Story

'என் அனுபவத்தில் இவிஎம் நம்பிக்கையானது'- கார்த்தி சிதம்பரம் கருத்து

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
nn

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இவிஎம் மெஷினுக்கு மாற்றாக வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. அண்மையில் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக விவிபேட் குறித்து சந்தேகங்களை எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவிஎம் மெஷின் நம்பிக்கையானது தான் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய கார்த்தி சிதம்பரம், விவி பேடை எடுத்து விட்டால் இவிஎம் நம்பிக்கையானது. என்னை பொறுத்தவரை எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் இதுவரை என்னுடைய அனுபவத்தில் எந்த தவறும் நடந்ததாக தெரியவில்லை. ஆனால் மற்றவர்களுக்கு வேறு கருத்து இருக்கிறது என்பதை நான் முழுமையாக அறிகிறேன்'' என்றார்.