Skip to main content

அ.தி.மு.க.வில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

congress party district leader join with admk party


புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் தர்ம.தங்கவேல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

 

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி.யின் தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ. த.புஷ்பராஜ், பல வருடங்களாக காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவராக இருந்தார். அதன் பிறகு இளைஞர்களுக்கு கட்சிப் பதவிகள் கொடுக்க வேண்டும் என்ற போது புஷ்பராஜின் சகோதரரின் மகன் தர்ம தங்கவேலுவுக்கு அந்தப் பதவியைப் பெற்றுக் கொடுத்தார். இவரும் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார்.

 

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தேர்தலின் போது, தி.மு.க. கூட்டணியில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருந்தும், அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்று மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரானார். அதேபோல் துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் தெற்கு மாவட்டத் தலைவர் தர்ம.தங்கவேலுவின் மனைவி உமா மகேஸ்வரி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

 

அதன் பிறகு,  புதுக்கோட்டையில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில்  விரிசல் தொடர்ந்து இருந்து வந்தது. இந்தச் சம்பவத்தால் ப.சிதம்பரமும் தர்ம.தங்கவேலை கண்டித்ததோடு அவருடனான தொடர்புகளைக் குறைத்துக் கொண்டார். இந்த நிலையில் தான் தற்போது தர்ம.தங்கவேல் மற்றும் ஆலங்குடி நகர இளைஞர் காங்கிரஸ் ஆனந்த் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கருடன் சென்னை சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.