கரோனா அச்சுறுத்தல் காரணமாக, 144 தடை உத்தரவு பிறப்பித்த உள்ள நிலையில், வட சென்னையில் வாழும் 60 சதவீதம் மக்கள் தினக்கூலியை நம்பி வாழ்க்கை நடத்துபவர்களாகவே உள்ளனர். தற்போது விதித்துள்ள தடை உத்தரவால் அப்பகுதி மக்கள் அத்தியவாசிய பொருட்களுக்கு கஷ்பட்டு வரும் நிலையில், ராயபுரம் தொடங்கி வட சென்னை முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு, தடை உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து இன்று வரையிலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிகரம் நீட்டிவருகிறார் திரவியம் என்பவர்.
ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று 15 நாட்களுக்கான காய்கறிகள், தெருக்களில் இருப்பவர்களுக்கு உணவு, குடிதண்ணீர், மாஸ்க், போன்ற பாதுக்காப்பு உபகரணங்களையும் கொடுத்து, விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அதேபோல பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ்சார்களுக்கும் உணவுகளைக் கொடுத்து உதவி வருகிறார். பெரம்பூர், ராயபுரம் பகுதியில் கட்டிட்ட வேலைக்கு வந்தவர்கள் 4 நாட்களாக பசியும், பட்டினியுமாக இருந்ததை அறிந்து அப்பகுதிச் சென்று அவர்களுக்கும் உணவு வழங்கினார்.
அதோடு மட்டும் நின்றுவிடாமல் அரசுக்கு ஒருபடி மேலே சென்று மிகவும் நலிவுற்ற குடும்பத்தை தேர்வு செய்து அவர்களுக்கு இரண்டாயிரம் ருபாய் பணத்தை வட சென்னை காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம் வழங்கினார்.