Skip to main content

கள்ளச்சாராய மரணம்; சட்டப்பேரவையில் இரங்கல்

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Condolences in the Legislature incident by fake liquor

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று (19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 35 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சம்பவத்திற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்ததோடு, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டும், மாவட்ட காவல்துறையினர் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் இன்று (20-06-24) கூடியது. முதல் நாள் கூடிய கூட்டத்தில், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். கள்ளச்சாராய விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக தமிழ்நாடு முதல்வர் தெரிவித்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டோருக்கு உடனே சிகிச்சை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளக்குறிச்சியில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம்; ஆட்சியர் அதிரடி !

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
11 tahsildar transferred in Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் சிலர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதே சமயம் இது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் 11 வட்டாட்சியர்களை பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார். சின்னசேலம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட  வட்டாட்சியர்களை மாற்றி உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் முதல்வர் ஏற்கனவே இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரையும் பணியிடை மாற்றம் செய்த நிலையில் தற்போது புதிய ஆட்சியர் 11 வட்டாட்சியர்களை மாற்றம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

ரூ.11 லட்சம் மதிப்பிலான பணத்தால் சுவாமிக்கு அலங்காரம்; ஆச்சர்யமடைந்த பக்தர்கள்!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Swami was decorated with money worth Rs.11 lakh

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சிவன் கோவிலில் இன்று மாலை வாராகி அம்மனுக்கு சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பதினோரு லட்சம் மதிப்பிலான பணத்தாலும் நகைகளாலும் அம்மன் சிலை முழுவதும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் குத்து விளக்கு ஏற்றியும் வாழை இலையில் அரிசி தேங்காய் மஞ்சள் வாழைப்பழம் உள்ளிட்டவைகளை வைத்து தீபம் ஏற்றப்பட்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தச் சிறப்பு விளக்கு பூஜையில் கலந்து கொண்டார்.

10 நாட்களுக்குள் நினைத்த காரியங்கள் அனைத்தும் உடனடியாக நிறைவேறும் என்றும், ஜாதக ரீதியான தோஷங்கள் தொழில் பிரச்சனைகள் எதிரி தொல்லைகள் கண் திருஷ்டி குழந்தை இல்லாத தம்பிகளுக்கு ஒரு குழந்தை கிடைக்கும் கடன் பிரச்சினை தீரும் உள்ளிட்ட அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்தப் பூஜையில் மந்திரங்கள் முழங்க அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.