உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது, காலம் தாழ்த்தியது மட்டுமல்லாமல், தீர்ப்பையே புறக்கணித்து வரும் மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், ராணுவ கண்காட்சியை துவக்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சியினர் வீடுகள், கட்சி அலுவலகங்கள் என பல இடங்களில் கறுப்பு கொடி ஏற்றியும், கறுப்பு பலூன்களை பறக்க விட்டும், கறுப்பு சட்டை அணிந்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேபோல், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கறுப்பு சட்டை அணிந்து காவிரி உரிமை மீட்பு நடை பயணம் மேற்கொண்டுள்ளார். திமுக தலைவர் கலைஞர், கோபாலபுரம் இல்லத்தில் கறுப்பு சட்டை அணிந்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். கலைஞர் கறுப்பு சட்டை அணிந்த புகைப்படம் அவரின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.