Skip to main content

சமரசத்தில் முடிந்தது சர்க்கார் பிரச்சனை- இயக்குனர் முருகதாஸ்

Published on 30/10/2018 | Edited on 30/10/2018

 

 The compromise is the problem of the Sarkar problem

 

சர்க்கார் கதை பிரச்னையில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக இயக்குனர் முருகதாஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சர்கார் படத்தின் கதை தனது செங்கோல் படத்தின் கதை என குறும்பட இயக்குனர் வருணன் வழக்கு தொடுத்துத்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக சர்க்கார் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் முருகதாஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக வெற்றிக் கழகம் நாளை முக்கிய ஆலோசனை!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tamilaga Vettri Kazhagam important meeting tomorrow

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தன்னுடைய மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அரசியலில் கால் பதிக்கும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகமாக மாற்றி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என்றும் தெரிவித்திருந்தார். விஜய்யின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி தற்போது வரை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நாளை (19.02.2024) காலை 9.00 மணி அளவில் நடைபெற உள்ளது. எனவே கட்சியின் மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“விஜய் பயந்து போய்ட்டா என்ன பண்ண முடியும்” - சீமான் கேள்வி

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

Seeman spoke about his political journey with Vijay

 

நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாள் பெருவிழா நிகழ்வில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். இந்நிகழ்விற்குப் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “சூப்பர்ஸ்டார் என்பது ஒரு பட்டம். அது பட்டயம் கிடையாது. இந்த தலைமுறையில் விஜய் உயர்ந்து நிற்கிறார். அதை ஏற்க வேண்டும். எதார்த்தம் அதுதானே. சரத்குமார் சொல்வது சரிதானே. ரஜினிகாந்த் கூட ஆமாம் என்று தான் சொல்கிறார். அதை ரஜினிகாந்தே ஒத்துக்கொள்கிறார். 

 

2024 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா எனக் கேட்கின்றனர். அதை நீங்கள் விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். அன்று தான் யோசிக்கனும். விஜய்யின் ரசிகர்களை கவர்வதற்காக பேசுவதாகச் சொல்கிறார்கள். அது அப்படி இல்லை. சூர்யா, கார்த்திக் போன்றோருக்கு நெருக்கடி வரும்பொழுதும் பேசியுள்ளேன். 

 

நாங்க தனிச்சுப் போட்டியிட எப்பொழுதும் தயாராக உள்ளோம். பேரம் பேசுவோம். கூட்டணி பேசுவோம் என்ற சிந்தனை இல்லை. வந்தாலும் அதை அன்றைக்குத்தான் பேச வேண்டும். முதலில் விஜய் கட்சி ஆரம்பிக்க வேண்டும். கொள்கையை முன்வைக்க வேண்டும். எனக்கு சில கொள்கைகள் உள்ளது. அது போல் அவருக்கும் கொள்கைகள் இருக்க வேண்டும். நான் அவரை அமர வைத்து விட்டு பிரபாகரன் வாழ்க எனச் சொல்லி விஜய் பயந்துவிட்டால் என்ன செய்வது.

 

நான் விஜய்யை சந்திக்கவில்லை. அவரது வீட்டு வாசலில் நடந்து போனேன். நானும் பாரதிராஜாவும் நடைபயணம் மேற்கொண்டுள்ள போது வாயிற்காவலரிடம் விஜய் உள்ளாரா எனக் கேட்பேன். இதுதான் நடந்தது” எனக் கூறினார்.