Skip to main content

'முழு ஊரடங்கில் கரோனா சோதனையை அதிகரியுங்கள்' - பிரப்தீப் கவுர்

Published on 23/05/2021 | Edited on 23/05/2021

 

complete lockdown coronavirus prevention doctor prabhdeep kaur tweets

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் நாளை (24/05/2021) முதல் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

complete lockdown coronavirus prevention doctor prabhdeep kaur tweets

இந்த நிலையில் தமிழக அரசின் மருத்துவ நிபுணர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள மருத்துவர் பிரப்தீப் கவுர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பரவல், இறப்புகளைக் குறைக்க முழு ஊரடங்கு காலத்தை எவ்வாறு பயன்படுத்துவது? 1.களப்பணியாளர்கள் மூலம் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல், 2.கரோனா மருத்துவ பரிசோதனையில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை சேர்ப்பது, 3.கிராமப்புறங்கள் மற்றும் நகர் புறங்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளைக் கூடுதலாகச் சேர்க்க வேண்டும், 4. அறிகுறிகளுடன் தனியார் துறைகளில் பணியாற்றும் பணியாளர்களைக் கண்காணித்தல், 5. முதியவர்களுக்கு மளிகை, காய்கறிகளை வீட்டிற்கே சென்று வழங்குதல். கரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

 கள்ளச்சாராய ஒழிப்பு மசோதா; ஆளுநர் ஒப்புதல்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Tamil Nadu Governor approves  illicit liquor  Bill

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கள்ளச்சாராய மரணத்திற்குப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து கண்டம் தெரிவித்தனர்.

இந்தப் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் கடந்த மாதம் 20 ஆம் தேதி தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கூடியது. அதில் மதுவிலக்கு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 இல் திருத்தம் செய்து, கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில், கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. பின்பு வாக்கு எடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கு மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். 

Next Story

“மாணவர்களுக்கு தரமான சைக்கிள் வழங்க” - தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
 P Chidambaram urges the TN government To provide quality bicycles to students

தமிழக அரசு பத்தாம் வகுப்பு முடித்து மேநிலை பள்ளி படிப்பிற்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டும் மாணவர்களுக்கு இலசவ சைக்கிள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு தரமான சைக்கிள் வழங்கும் படி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளபதிவில், “தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே? இந்தத் தரமில்லாத சைக்கிள்களத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

The website encountered an unexpected error. Please try again later.