
நடிகர் கமல்ஹாசனுக்கு கடந்த சில நாட்களாக இருமல், சளி இருந்ததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நடிகர் கமலுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து, மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட சக நடிகர்கள் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் அவருடன் பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய இசையமைப்பாளர் இளையராஜா, கமலின் உடல் நலம் குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ''நலமாக வரவேண்டும் சகோதரரே; கலை உலகை ஆ……….ஹா…………என ஆச்சரியப்பட வைக்க வேண்டும் வாருங்கள் சீக்கிரம்”என்றுபதிவிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)