Skip to main content

தமிழி கல்வெட்டு எழுத்துக்களை கண்டு வியந்த கல்லூரி மாணவர்கள்

Published on 20/08/2023 | Edited on 20/08/2023

 

College students were surprised to see Tamil inscriptions

 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற தமிழி கல்வெட்டுப் பயிற்சியில் சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய எழுத்துருக்களைக் கண்டு கல்லூரி மாணவர்கள் வியந்தனர்.

 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வரலாற்றுத் துறை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருந்த தமிழி எழுத்துகள் மற்றும் கல்வெட்டுகள் படித்தல் பயிற்சி நடைபெற்றது. வரலாற்றுத் துறை தலைவர் ஆ.தேவராஜ்  தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜ. பூங்கொடி பயிற்சியை தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு தமிழி கல்வெட்டு எழுத்துகளின் சிறப்புகளை கூறி அதை மாணவர்களுக்கு பயிற்றுவித்தார்.

 

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.இராஜகுரு கூறியதாவது,

 

''தமிழ் மற்றும் தமிழ்நாட்டின் பழமையை அறிந்திட உள்ள எண்ணற்ற  சான்றாதாரங்களில் முதன்மையானது தமிழி எழுத்துச் சான்றுகள். இவை பானை ஓடுகள், காசுகள், அணிகலன்கள் மற்றும் மலைக்குகைக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதில் எழுத்தறிவின் தொன்மையைக் காட்ட இவை முதன்மையானதாக இருந்தன. உலகின் பெரும்பாலான மொழிகளில் உள்ள வேர்ச்சொற்கள் தமிழாக இருப்பது தமிழின் தொன்மையை உணர்த்தும். தமிழி எழுத்துகள் உலகின் மிகப் பழமையான எழுத்துருக்கள்.

 

தமிழ்நாட்டில் முதன்முதலாக 150 ஆண்டுகளுக்கு முன்பு ராபர்ட் சீவல் என்ற ஆங்கிலேயரால் மதுரை மீனாட்சிபுரத்தில் தமிழி கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இவை வணிகப் பெருவழிகளில் நல்ல விளைச்சல் உள்ள பகுதிகளிலும், முக்கிய நகரங்களைச் சுற்றி அமைந்த குன்றுகளிலும் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாண்டிய நாட்டில் தான் உள்ளன''என்றார்.

 

பின்பு தமிழி எழுத்துகளை எழுதவும், வாசிக்கவும் பயிற்சி தரப்பட்டது.  மறுகால்தலை, விக்கிரமங்கலம், அழகர் மலை, கொங்கர் புளியங்குளம் உள்ளிட்ட மலைக்குகைகள், பானை ஓடுகள், காசுகள், முத்திரைகளில் உள்ள தமிழி கல்வெட்டுகளை படங்கள், அச்சுப்படிகள் மூலம் படிக்க கற்றுக் கொடுக்கப்பட்டது. அப்போது ஆங்கிலம், கிரேக்கம் உள்ளிட்ட மொழிகளின் எழுத்துகள் தமிழி போல உள்ளதைக் கண்டு மாணவ மாணவிகள் வியந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செல்போனுக்கு சார்ஜ் செய்த போது நேர்ந்த சோகம்; மாணவன் உயிரிழப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
The tragedy happened while charging the cell phone; College student lose their live

ராமநாதபுரத்தில் செல்போனுக்கு சார்ஜ் செய்த போது மின்சாரம் தாக்கி கல்லூரி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவன் அமுத கிருஷ்ணன். சம்பவத்தன்று அமுத கிருஷ்ணன் தன்னுடைய மொபைல் போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்பொழுது திடீரென மின்சாரம் தாக்கி மாணவன் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் மாணவனை திருவாடானை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் மாணவன் அமுத கிருஷ்ணன் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

மொபைல் போனுக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

அகழாய்வு முறைகளை அறிந்து வியந்த மாணவர்கள்!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Students who were surprised to know the methods of excavation

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் “தொல்லியல் அகழாய்வுகள்” என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற்றது. 9-ம் வகுப்பு மாணவன் ம.திவாகரன் வரவேற்றார். கண்காட்சியை தலைமையாசிரியர் ரெ.புரூணா ரெத்னகுமாரி திறந்து வைத்தார். 6-ம் வகுப்பு மாணவி மகா நன்றி கூறினார். 

முன்னிலை வகித்த மன்றச் செயலர் வே.ராஜகுரு பேசும்போது, தொல்லியலில் மிக முக்கியமானது அகழாய்வு. இதன் மூலமே பல தொல்லியல் உண்மைகள் கண்டறியப்படுகின்றன. அகழாய்வுகளே வரலாறு உருவாக்கப்படுவதற்கான முதன்மைச் சான்றாக அமைகின்றன. எழுத்துச் சான்றுகள் இல்லாத வரலாற்றுக்கு முற்பட்ட கால மனித வாழ்க்கையை அறிய அவர்கள் வாழ்ந்த இடங்களை தோண்டி, பயன்படுத்திய பழம்பொருள்களைக் கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை முறையை அறிய முடிகிறது என்றார். 

கண்காட்சியில், பரவலாகத் தோண்டும் வகை, ஆழத்தோண்டும் முறை, சுற்றகழாய்வு, நீள்குழி அகழாய்வு, குகை அகழாய்வு, சவக்குழி அகழாய்வு, நீருக்கடியில் அகழாய்வு போன்ற அகழாய்வு முறைகள், தொல்பொருட்களின் படங்கள், அழகன்குளம், பெரியபட்டினம் பகுதிகளில் மேற்பரப்பாய்வில் கண்டெடுத்த ரௌலட்டெட், அரிட்டைன், சீன பானை ஓடுகள், சங்குகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

இதில் அகழாய்வு அறிமுகம் பற்றி செ.முபிக்கா, அகழாய்வு முறைகள் பற்றி மு.சஞ்சிதா, அழகன்குளம் அகழாய்வு பற்றி மா.பிரியதர்ஷினி, தேரிருவேலி அகழாய்வு பற்றி அ.ஐனுன் ரிப்கா, தொண்டி அகழாய்வு பற்றி செ.கனிஷ்காஸ்ரீ, பெரியபட்டினம் அகழாய்வு பற்றி த.பிரியதர்ஷன் ஆகியோர் விளக்கமளித்தனர். கண்காட்சியில் இடம் பெற்ற படங்கள், தொல்பொருட்கள், விளக்கவுரை மூலம் அகழாய்வு முறைகளை அறிந்து மாணவ மாணவியர் வியந்தனர்.