Skip to main content

சட்டமன்ற நிகழ்வுகளை பார்வையிட்ட கல்லூரி மாணவிகள் (படங்கள்)

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஏற்பாட்டின் பேரில் நாடார் சரஸ்வதி கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இன்று (24.03.2023) சட்டசபை நிகழ்வை பார்த்து விட்டு வெளியில் வந்து எம்எல்ஏ சரவணகுமார் உடன் செல்பி எடுத்துக் கொண்டனர். தங்களுக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த எம்எல்ஏவுக்கு மாணவிகள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தேசிய நெடுஞ்சாலையில் ரூ.41.37 கோடி மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை! - ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. பெருமிதம்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
New tarmac on National Highway at a cost of Rs.4 1.37 crore says thangapandian mla

சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும், மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, முடிந்த அளவுக்கு தங்களின் தொகுதிக்கான திட்டங்களைக் கொண்டுவருவதில் முனைப்புடன் இருப்பார்கள். ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், தொகுதி மக்களிடம் தொடர்ந்து நல்ல பெயரெடுப்பதோடு, அதைத் தக்கவைத்துக்கொள்வதிலும் சிரத்தையுடன் செயல்பட்டு வருகிறார். ‘நமது மக்கள் எம்.எல்.ஏ.’என்ற  அடைமொழிக்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் தனது எம்.எல்.ஏ. சம்பளத்தை தொகுதி  மக்களின் நலன் சார்ந்த காரியங்களுக்காகச் செலவிட்டு வருகிறார்.  

தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. முயற்சியால் ரூ.41.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைத்திட, டெல்லியிலுள்ள தலைமை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முன் அனுமதி தந்துள்ளது. இது எப்படி சாத்தியமானது? ராஜபாளையம் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்திசெய்யும் நோக்கத்துடன், தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை மண்டல அலுவலகத்தில் கோரிக்கை மனு  ஒன்றை அளித்திருந்தார் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. இதனைத் தொடர்ந்து,  வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் அத்துறையிடம்  வலியுறுத்தினார்.

தற்போது, ராஜபாளையம் கிருஷ்ணாபுரம் OP முதல் ராஜபாளையம் நகர் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் வரையிலுள்ள தேசிய நெடுஞ்சாலையில்,  ரூ.41.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை அமைப்பதற்கு தலைமை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, டெண்டர் விடப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி திறக்கும் பணிகள் நிறைவுற்றதும், அடுத்த மாதமே சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி விடுவார்கள் என்று பெருமிதத்துடன் கூறினார்  தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ.   

வாக்களித்த மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணவேண்டுமென்ற சிந்தனையும் செயல்பாடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு இருப்பது ஆறுதலானது.  

Next Story

பதவியேற்ற அடுத்தநாளே ராஜினாமா; சிக்கிம் முதல்வரின் மனைவி அதிரடி

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Sikkim Chief Minister's wife Resignation the day after taking MLA oath

நாடாளுமன்றத் தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்குச் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. 

32 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்தில் பிரேம்சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆளும் கட்சியாக இருந்து வந்தது.  32 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 17 இடங்கள் தேவை என்ற பட்சத்தில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, சிக்கிம் ஜனநாயக முன்னணி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. ஏப்ரல் 19ஆம் தேதி சிக்கிம் மாநிலத்தில் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2ஆம் தேதி எண்ணப்பட்டது. அதில் அதிக பெரும்பான்மையாக 31 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி கைப்பற்றி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் இரண்டாவது முறையாக அம்மாநிலத்தின் முதல்வராகக் கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். இதற்கிடையே, சிக்கிம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முதல்வரின் மனைவி கிருஷ்ண குமார் ராய், நாம்சி-சிங்கிதாங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து, நேற்று முன் தினம் (12-06-24) சிக்கிம் மாநில சட்டசபையில் நடந்த பதவியேற்பு விழாவில், முதல்வரின் மனைவி கிருஷ்ண குமார் ராய் எம்.எல்.ஏவாக பதவியேற்றார். 

Sikkim Chief Minister's wife Resignation the day after taking MLA oath

இந்த நிலையில், கிருஷ்ண குமாரி ராய் நேற்று (13-06-24) திடீரென்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். கிருஷ்ண குமாரி ராயின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதாகச் சட்டசபை செயலாளர் உறுதி செய்தார். பதவியேற்ற அடுத்த நாளே சிக்கிம் மாநில முதல்வரின் மனைவி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.