Skip to main content

சாலை தடுப்பில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

 

College students lost their life in two-wheeler collision at road block

 

கோவையில் சாலை தடுப்பின் மீது இருசக்கர வாகனம் வேகமாக மோதியதில் அதில் பயணித்த இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ஜோசப் அலெக்ஸ் மற்றும் சல்மான் ஆகிய இருவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தனர். இருவரும் நேற்று நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபொழுது ஈச்சனாரி பகுதி அருகே சாலை தடுப்பின் மீது இருசக்கர வாகனமானது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோவை போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !