Advertisment

தமிழ்நாடு சட்டப்பேரவையானது மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று (05.04.2023) மீண்டும் கூடியது. இந்நிலையில் இன்று வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம்மற்றும்பால் வளத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாகசட்டசபை நிகழ்வை காண குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரி மாணவிகள் முகக்கவசம் அணிந்து வந்திருந்தனர். சட்டப்பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி,சட்டமன்ற நுழைவு வாயில் அருகில் ரத்தப் பரிசோதனை செய்து கொண்டார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம்ஆகியோர்இன்று சட்டப்பேரவை நிகழ்வில்கலந்துகொள்ள சட்டமன்றத்திற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.