Skip to main content

ஆட்சியர் பெருந்திட்ட வாளாகம் அடிக்கல் நாட்டுவிழா... முதல்வருக்கு நெருக்கமான நிறுவனத்துக்கு பணி ஒப்பந்தம்...

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

Collector office Complex Foundation Ceremony - contract for the company closest to the CM

 

 

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் பகுதியைப் பிரித்து திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கை. இந்த கோரிக்கை கடந்தாண்டு ஏற்கப்பட்டு 2019 நவம்பர் 24ஆம் தேதி புதிய மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு செயல்பட துவங்கியது.

 

முதல் மாவட்ட ஆட்சித்தலைவராக சிவன்அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அரசின் 33 துறை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு பணிகள் செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், எஸ்.பி உட்பட மாவட்ட அதிகாரிகளுக்கான அலுவலங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பள்ளி போன்ற இடங்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

 

மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உட்பட அலுவலகம் அமைக்க அரசின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக பல இடங்கள் பார்வையிடப்பட்டன. இறுதியில் திருப்பத்தூர் வனத்துறைக்கு சொந்தமான திருப்பத்தூர் நகரின் மையத்தில்  திருப்பத்தூர் வன ரேஞ்சர் அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் காலியாக உள்ள 14.7 ஏக்கர் இடத்தினை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அமைக்க எடுத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. வனத்துறை வழங்கும் இந்த இடத்துக்கு மாற்றாக வேறு இடத்தில் இடம் வழங்குவது என அரசு முடிவு செய்தது.

 

அந்த 14.7 ஏக்கர் இடத்தில் 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. காணொளி காட்சி மூலமாக நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு தொடங்கிவைத்தார்.

 

2021ஆம் ஆண்டு இந்த பணிகள் முடிந்து இவ்வளாகம் திறப்பு விழா காண வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தத்தை நாமக்கல்லை சேர்ந்த முதல்வருக்கு நெருக்கமான ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்கிறார்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

‘வண்டில என்ன கம்ப்ளைண்ட்?, வண்டியே கம்ப்ளைன்ட் தான்!’- அரசு பேருந்து ஓட்டுநரின் புலம்பல் 

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Govt bus driver video goes viral

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே சர்வீஸ் சாலையில் வர வேண்டிய பேருந்து நெடுஞ்சாலையில் சென்றதால் ஆத்திரமடைந்த  பயணி இத்தனை நாளா பஸ் கீழே வந்துச்சு இப்ப ஏன் கீழ வரல வண்டில என்ன கம்பிளைன்ட்? என கேட்க வண்டியே கம்பளைண்ட் தான் என்று ஓட்டுநர் கூறும் விதம் வைரல் ஆகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம்  நாட்றம்பள்ளி  சென்னை - பெங்களூர் ஆறு வழி தேசிய நெடுஞ்சாலை  பகுதியில் மேம்பாலத்தின் வழியாக பேருந்துகள் செல்வதால், சர்வீஸ் சாலையில் பேருந்துகள் வந்து செல்லாமல் இருந்தது. பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் சுமார் 40 அடி உயரம் மேலே ஏறி சென்று பேருந்தில் பயணம் செய்யும் நிலை இருந்தது. இதனை அறிந்த தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் சமீபத்தில் சர்வீஸ் சாலை அமைத்தது. தொடர்ந்து பல்வேறு அரசு பேருந்துகள் சர்வீஸ் சாலை வழியாக சென்று வந்தது.

Govt bus driver video goes viral

சர்வீஸ் சாலை வழியாக செல்லும்போது பேருந்து கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக தாமதமாக செல்லக்கூடிய நிலை இருப்பதால் ஓட்டுநர்கள் மேம்பாலத்தின் வழியாகவே பேருந்தை இயக்கி செல்கின்றனர். இதனால் வயதானவர்கள், குழந்தைகள் ஏரி வர சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணி ஒருவர் ஏறி பேருந்து கீழே வராமல் ஏன் மேலே செல்கிறீர்கள்? பேருந்தில் என்ன கம்பளைண்ட் என்று ஓட்டுநரிடம் கேட்டுள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அப்போது ஓட்டுநர் செய்வதறியாமல் திகைத்து, “வண்டியே கம்ப்ளைன்ட் தான் என்கிட்ட கேட்டு என்ன பண்றது. நானே இதை வச்சு ஓட்டிட்டு இருக்கிறேன் போய் அதிகாரிகளை கேளுங்க...” என்று பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.