Skip to main content

கலெக்டர் - டி.ஆர்.ஓ. மோதல் என்பது பொய்; டி.ஆர்.ஓ. யார் மீதும் விரோதம் கொள்ளாதவர்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

 

Collector - DRO conflict is a lie

 

 

கலெக்டர் – டி.ஆர்.ஓ மோதல். – பாதிக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர்கள் என்கிற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ரத்தினசாமி குறித்து நாம் வெளியிட்ட செய்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

 

இந்நிலையில் இதுப்பற்றி நம்மிடம் பேசிய மாவட்ட வருவாய்த்துறை அலுலவர் இரத்தினசாமி அலுவலக தரப்பை சேர்ந்தவர்கள், டி.ஆர்.ஓ. சார் மிக நேர்மையானவர், யார் மனதும் புண்படக்கூடாது என நடந்துக்கொள்பவர். அவர் சில நாட்கள் அலுவலகத்துக்கு வராமல் இருந்தாலும் அவர் தனது பணிகளை தொடர்ந்து செய்துக்கொண்டுதான் இருந்தார்.

 

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு முதல்வர் வருகையின்போது வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர், முதல்வர் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது உண்மைதான். அதற்கு காரணம், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) பணியிடம் நீண்ட மாதமாக காலியாகவுள்ளது. அந்த இடத்துக்கு பொறுப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்றாலும் அவரால் முழு பணியை கவனிக்க முடியவில்லை. இதனால் முதல்வர்களுடன் வந்த துறை செயலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரும் பணியில் டி.ஆர்.ஓ ஈடுப்பட்டிருந்தார்.

 

இது மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தெரியும். 10 நாட்கள் எல்லாம் அலுவலத்துக்கு வராமல் இருந்தால் மாவட்ட ஆட்சியர் கேள்வி எழுப்பாமல் இருக்கமாட்டார். கடந்த 3 ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியருடன் பணியாற்றி வருகிறார். இருவரும் ஒத்த கருத்துடையவர்கள், இருவருக்கும் மோதல் என்பதெல்லாம் தவறானது. அதேபோல் டி.ஆர்.ஓ. அலுவலத்துக்கு தினமும் வரவேண்டும் என்கிற அவசியமில்லை, கேம்ப் அலுவலத்தில் இருந்தும் பணியாற்றலாம். ஜூம் மீட்டிங் பல நடந்துள்ளன. அதில் கேம்ப் அலுவலகத்தில் இருந்தபடியே கலந்து கொண்டுள்ளார். தலைமை செயலாளர் நடத்திய பல வீடியோ கான்பரன்சிங் கூட்டங்களில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலந்து கொண்டுள்ளார்.  கரோனாவை கண்டு அவர் பயப்படவில்லை. அதே நேரத்தில் கரோனா பரவலால் முன் எச்சரிக்கையாகவும் செயல்படுகிறார்.

 

வருவாய்த்துறை ஆய்வாளர், உதவியாளர்கள் பதவி உயர்வுக்கான பைல் அவரது கையெழுத்துக்கு வந்தது, அதில் உடனடியாக கையெழுத்திடாமல் வைத்திருந்ததுக்கு பல நிர்வாக காரணங்கள் உள்ளன, அதனை தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டார்கள். கலெக்டருக்கும் – டி.ஆர்.ஓவுக்கும் மோதல் என்பதெல்லாம் கிடையாது. இருவர் அலைவரிசையும் ஒத்துப்போகிறது. அதனால்தான் இருவரும் 3 வருடங்களை கடந்தும் ஒரே மாவட்டத்தில் பணியாற்றுகிறார்கள்.

 

கலெக்டருடன் மோதல் வரும் சூழல் ஏற்பட்டால் டி.ஆர்.ஓ. ஒதுங்கி சென்றுவிடும் சுபாவம் கொண்டவர். உயர் அதிகாரிகளுடன் மோதுவது, தனக்கு கீழே பணியாற்றும் அதிகாரிகளின் மனம் நோகும்படி நடந்துக்கொள்வது என்பது போன்றெல்லாம் அவர் எப்போதும் நடந்துக்கொள்ளமாட்டார். அவர் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்தபின்புதான் திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை திட்டம், ரிங் ரோடு திட்டம் போன்றவை வேகம் பிடித்துள்ளன. இதையெல்லாம் அவர் என்னால்தான் இது வேகமாக நடைபெறுகிறது என்று வெளிப்படுத்த விரும்பாதவர் என்றார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.