அதிமுக கொடிக்கம்பம் விழுந்து லாரி மோதி கால் இழந்த ராஜேஸ்வரிக்கு திமுக சார்பில் ரூபாய் 5 லட்சம் நிதியுதவி. கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஸ்வரியை சந்தித்து, ஆறுதல் கூறியபின் நிதியை வழங்கினார் ஸ்டாலின்.

COIMBATORE INCIDENT DMK PRESIDENT MK STALIN MEET RAJASHWARI AT HOSPITAL

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், "கோவையில் கொடிக்கம்பம் விழுந்து பெண் கால் இழந்த நிலையில் அதை வைத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை. கொடிக்கம்பம் விழுந்து பெண் பாதிக்கப்பட்ட நிலையில் லாரி ஓட்டுநர் மட்டுமே கைது. விழா ஏற்பாட்டாளர்களையும், அதிமுகவினர், கொடிக்கம்பங்களை நட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யவில்லை. சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ இறந்த நிலையில் கோவையில் மற்றொரு பெண் பாதிக்கப்பட்டுளளார். கொடிக்கம்பம் விழுந்ததால் பெண் பாதிக்கப்பட்டதை மறைக்க அதிமுகவினர் முயற்சிஎன ஸ்டாலின் குற்றம்சாட்டினார் மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரின் குடும்பத்திற்கும் தமிழக அரசு பக்க பலமாக இருக்க வேண்டும் என்று உருக்கத்துடன் கேட்டுக்கொண்டார்".

Advertisment

COIMBATORE INCIDENT DMK PRESIDENT MK STALIN MEET RAJASHWARI AT HOSPITAL

Advertisment

மேலும் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், "அதிமுக கொடிக் கம்பம் சரிந்ததால் விபத்துக்குள்ளாகி, கால்கள் அகற்றப்பட்டுள்ள ராஜேஸ்வரிவுக்கு ஆறுதல் கூறினேன். திமுக சார்பில் நிதியுதவி வழங்கி, அவருக்கு செயற்கைக் கால் பொருத்தவும் உதவப்படும் என உறுதியளித்தேன். அதிமுக சார்பில் ஆறுதல் கூட இல்லை; இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடாது! என குறிப்பிட்டுள்ளார்".