Skip to main content

கோவை: சிறுமியிடம் தவறாக நடந்துக்கொண்ட நபரை கைது செய்த காவல்துறை!

Published on 09/02/2020 | Edited on 09/02/2020

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 46). இவர் காமராஜபுரத்தில் உள்ள ஒரு மர குடோனில் கூலி வேலை செய்து வருகிறார்.  
 

அதே குடோனில் ஒரு தம்பதியினர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (08/02/2020) தம்பதியினர் தங்களின் 5 வயது சிறுமியுடன் வேலைக்கு வந்துள்ளனர். பின்பு சிறுமியை தாங்கள் வேலை செய்யும் இடத்திற்கு அருகில் விளையாட விட்டு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த ஆனந்த் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாகக் கூறி அழைத்து சென்று,  சிறுமியிடம் தவறாக நடந்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது. 

coimbatore district parents working company child incident police investigation


சிறுமியின் அழும் சத்தத்தைக் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது ஆனந்தின் செயலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுமியை மீட்ட பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 

புகாரின் பேரில் ஆனந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்