Skip to main content

விருத்தாசலம் பகுதி விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் பயிற்சி!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் அங்ககத்துறை சார்பில் கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், கார்மாங்குடி கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை முறையில் பயிரிடும் நுட்பங்கள் குறித்து மூன்றாவது கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.  

 Coimbatore Agricultural University professors training farmers


இப்பயிற்சியில் மண்புழு எரு, பூச்சிவிரட்டி, இயற்கை களைக்கொல்லி, மீன் அமினோ கரைசல், வேப்பங்கொட்டை சாறு மற்றும் இஞ்சி பூண்டு கரைசல் தயாரித்தல், போன்றவை குறித்தான பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கோவை வேளாண் பல்கலைக்கழக அங்ககத்துறை தலைவர் பேராசிரியர் சோமசுந்தரம், பேராசிரியர் ஜான்சிராணி, பேராசிரியர் கணேசன்,  பேராசிரியர் சுனிதா மற்றும் உழவர் மன்ற தலைவர்  கார்மாங்குடி வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மேற்கண்ட பயிற்சிகளை விவசாயிகளுக்கு அளித்தார்கள். இறுதியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மண்புழு எரு தயாரிக்கக்கூடிய இடு பொருட்களான மண்புழு, பாலிதீன் தொட்டி ஆகியவை வழங்கப்பட்டது.

 Coimbatore Agricultural University professors training farmers


இறுதியாக வருகிற டிசம்பர் 3 மற்றும்  4- ஆம் தேதிகளில் கோவை வேளாண் பல்கலை கழகத்தை நேரில் பார்வையிட அழைத்துச் செல்வதாக முடிவு செய்யப்பட்டது. பயிற்சி நிறைவாக உழவர் மன்ற உறுப்பினரும், முன்னோடி விவசாயியான முத்து.பன்னீர்செல்வம் நன்றி கூறினார். பிறகு பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளின் நெற்பயிர்களை பேராசிரியர் குழுக்கள் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்கள்.

 




 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.