CM Stalin's consultative meeting with DMK MPs

Advertisment

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.பிக்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டி.ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட அனைத்து திமுக எம்.பிக்களும் கலந்துகொண்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

வரும் ஜூலை 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆளுநர் ஆா்.என். ரவியின் செயல்பாடுகள், பொது சிவில் சட்டம், மணிப்பூர் கலவரம், அமலாக்கத்துறை சோதனை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.