Skip to main content

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட அரசுப் பள்ளி நக்கீரன் முயற்சியால் மீண்டும் திறப்பு!

Published on 15/11/2021 | Edited on 15/11/2021

 

Closed three years ago   Re-opening of Government School by Nakkeeran initiative


தமிழ்நாட்டில் சுமார் 50- க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் கடந்த சில வருடங்களில் சத்தமில்லாமல் மூடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் இல்லை என்று மூடப்பட்டு நூலகம் திறக்கப்பட்ட அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குளத்தூர் கிராமத்திலும், ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சின்னப்பட்டமங்கலம் கிராமத்திலும் சக பத்திரிகை நண்பரான கே.சுரேஷ் உடன் இணைந்து நக்கீரன் எடுத்த முயற்சியால் கிராம மக்களுடன் பேசி அதிகாரிகளால் மூடப்பட்ட  இரண்டு அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களைச் சேர்த்து கல்வித்துறை அதிகாரிகளை வைத்து மீண்டும் திறக்கப்பட்டது.

 

அதே போல தான் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அல்லம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு குழந்தைகளுடன் இயங்கியதால், அடுத்த வருடமே சத்தமில்லாமல் மூடப்பட்டது. தகவலறிந்து பள்ளிக்கு சென்று மூடப்பட்ட பள்ளியிலிருந்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு பேசியதுடன் செய்தியும் வெளியிட்ட நிலையில் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. ஒரு மாணவருடன் பள்ளி இயங்கியது.

 

இந்த நிலையில் தற்போது ஒரு மாணவர் கூட இல்லை என்று மீண்டும் பள்ளி மூடப்பட்டிருக்கும் நிலையில் மீண்டும் நாம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தியிடம் கோரிக்கை வைத்த நிலையில் மாணவர்களை சேர்க்க றெ்றோர்களிடம் நாம் நடத்திய பேச்சுவார்த்தையோடு, பச்சலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிமணி, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கிராம மக்களிடமும் பெற்றோர்களிடமும் தொடர்ந்து பள்ளியை திறக்க மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதன் பயனாக பல பெற்றோர்கள் முன்வந்து பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வந்தனர்.

 

மீண்டும் பள்ளி திறக்கப்பட உள்ளதால் ஒரே நாளில் கட்டிடங்கள், வகுப்பறைகள் வண்ணமயமாக்கப்பட்டது. திங்கள் கிழமை பள்ளிக்கு மாணவர்களை சேர்க்க வந்த பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் இனிப்புகளும், பூவும் கொடுத்து வரவேற்கப்பட்டனர். 

 

மூடப்பட்ட பள்ளியை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி மீண்டும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டாரக்கல்வி அலுவலர் முத்துக்குமார் மற்றும் ஊராட்சிமன்றத் தலைவர், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் மூடப்பட்ட மூன்றாவது அரசுப் பள்ளியையும் மீண்டும் திறந்தோம் என்ற மகிழ்ச்சியோடு நாம் அங்கிருந்து புறப்பட்டோம்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.