Skip to main content

இரண்டு நாட்களாக துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம் – குப்பை நகராக மாறிய ஆம்பூர்!

Published on 13/01/2021 | Edited on 13/01/2021

 

Cleaners struggle for two days - Ambur turned into a garbage city!

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்புர் நகராட்சி ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான சம்பளம், கரோனா கால போனஸ், கரோனா தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. இதுக்குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டும், வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை.

 

இந்நிலையில் சம்பளம், போனஸ், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் குப்பை அள்ளச் சொல்லுவதை குறிப்பிட்டு ஐந்து அம்ச கோரிக்கைகளுடன் ஜனவரி 12 மற்றும் 13 ஆம் தேதியென இரண்டு நாட்களாக குடும்பத்தினருடன் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து போராடி வருகின்றனர்.

 

Cleaners struggle for two days - Ambur turned into a garbage city!

 

போராட்டம் செய்யும் பணியாளர்களிடம் நகராட்சி நிர்வாகம் இதுவரை முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் ஆம்பூர்  நகரம் முழுவதும் குப்பைகள் தேங்கியுள்ளன. பொங்கல் திருநாளில் நகரம் சுத்தமாகயில்லாமல் அசுத்தமாக வைத்திருக்க அதிகாரிகள் காரணமாகிவிட்டார்கள் என குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.