
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (மார்ச் 14 ஆம் தேதி) தொடங்கியது. தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 2022 - 2023 கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்புத் தேர்வினை 7.8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
நேற்று நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழித்தேர்வை 50,674 பேர் எழுதவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்திருந்தது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்வை பள்ளி மாணவர்கள் 49,559 பேரும் தனித்தேர்வர்கள் 1,115 பேரும் தேர்வு எழுத வரவில்லை எனப் பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியிட்டிருந்த நிலையில் இன்று நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தமிழ் மொழி தேர்வை 12,660 பேர் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.