Skip to main content

சிவில் சர்விஸ் தேர்வு முடிவு... கன்னியாகுமரி மாணவர் தமிழக அளவில் முதலிடம்... 

Published on 04/08/2020 | Edited on 04/08/2020
exam

 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 829 பணியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி. தேர்வு நடைபெற்றது. 2019 செப்டம்பரில் நடந்த யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியாகியிருந்தது.  

 

வெளியான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு முடிவில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் தேசிய அளவில் ஏழாம் இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

“நான் முதல்வன் திட்டம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Chief Minister M.K. Stalin's Pride

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC - யு.பி.எஸ்.சி.) சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தமாக 1016 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவில் 347 மாணவர்களும், இதர பிற்படுத்தப்பட்டவர் (OBC) பிரிவில் 303 மாணவர்களும் இ.டபிள்யூ.எஸ். 115 மாணவர்களும், எஸ்.சி. 165, எஸ்.டி. 86 மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் ஆதித்யா ஸ்ரீ வஸ்தா என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தேர்வில் அகில இந்திய அளவில் 78 ஆவது இடமும், தமிழ்நாட்டில் இரண்டாமிடமும் பிடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மருத்துவ மாணவர் பிரசாந்த் சாதனை படைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுவையில், “மத்திய அரசின் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற நான் முதல்வன் திட்டம் உதவியாக இருந்தது” எனத் தெரிவித்திருந்தார். 

Chief Minister M.K. Stalin's Pride

இதனை மேற்கோள்காட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “நான் முதல்வன் திட்டம்: என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம். நேற்று வெளியான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முடிவுகளே அதற்கு சாட்சி” எனத் தெரிவித்துள்ளார்.