Director SB Jananathan passes away !!!

'

இயற்கை', 'ஈ', 'பேராண்மை', 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், கடந்த 11.03.2021தேதி அன்றுமயங்கிய நிலையில் வீட்டில் காணப்பட்டார். உடன் இருந்தவர்கள் அவரை மீட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.ஜனநாதனுக்கு மூளை சாவு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.

Advertisment

இந்நிலையில்,இன்று தற்பொழுது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் (61) சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் இயக்கிய முதல் படமான 'இயற்கை' தேசிய விருது பெற்றது என்பதும், கடைசியாக அவர் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் 'லாபம்' என்ற திரைப்படத்தை இயக்கி, படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தொகுப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.