Skip to main content

“சின்மயி யாருங்கிறது இப்ப தெரிஞ்சு போச்சு!”-ரோட்டரி மாநாட்டில் கேலிக்கு ஆளான பேச்சு!

Published on 05/01/2020 | Edited on 05/01/2020

சமூக சேவை செய்யும் அமைப்பான ரோட்டரி கிளப் மூலம், அதன் உறுப்பினர்களான  செல்வந்தர்களும் தொழிலதிபர்களும்,  தங்களால் இயன்ற உதவியை ஏழை, எளியோருக்குச் செய்து வருகின்றனர்.

சென்னை, நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில், ‘சிம்மாசனம் 2020’ என்ற பெயரில் மாவட்ட அளவிலான மாநாடு,  மேதகு கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்க, டாக்டர் ஜமீர் பாஷா (மாவட்ட கவர்னர்), திருநாவுக்கரசு (சேர்மன்) போன்ற ரோட்டரியன்கள் ஏற்பாட்டில்,  ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய இரு நாட்கள் நடந்து வருகிறது.  

 

dfssd


‘நக்கீரன்’ ஆசிரியர் நக்கீரன் கோபால்,  கார்த்திகைச் செல்வன் போன்றவர்கள் பத்திரிக்கையாளர்கள் என்ற முறையிலும், ஆன்ட்ரியா, சாக்ஷி அகர்வால் போன்ற நடிகைகளும், பின்னணி பாடகியான சின்மயி போன்றவர்களும், இந்த மாநாட்டில் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.

“சேவையுள்ளம் கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த இந்த மாநாட்டில், ஒரு பெண்ணின் சபை நாகரிகமற்ற பேச்சால் சலசலப்பு உண்டானது..” என நம்மிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், அந்த மதுரை மாவட்ட ரோட்டரியன். அவர் குறிப்பிட்ட பெண், சின்மயி.


அந்த மாநாட்டில் சின்மயி அப்படியென்ன செய்தார்?
 

sdfs

 

‘ரோட்டரியில் பெண்கள்’ என்னும் தலைப்பில் பேசவே சின்மயி அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அந்த மேடையில் தனது ‘பெர்சனல்’ சமாச்சாரத்தை விவரிக்க முயற்சித்தார்.  கவிஞர் வைரமுத்துவுக்கும் தனக்கும் உள்ள பிரச்சனை, யூனியனிலிருந்து தன்னை ராதாரவி வெளியேற்றியது என சொந்தக் கதையைச் சொல்லிவிட்டு,   நக்கீரன் கோபால் குறித்தும் பேச ஆரம்பித்தார்.  “நான் பி.ஜே.பி., அந்தக் கட்சியினர் எனக்கு பிளாட் வாங்கிக் கொடுத்ததாக நக்கீரனில் எழுதியிருக்காங்க. நக்கீரன் கோபால் சார்.. அந்த பிளாட் சாவியைக் கொடுங்க..” என்று வம்பிழுத்தார். சின்மயி ராங் ரூட்டில் பேசுவதைக் கண்ட கவர்னர் ஜமீரும், சேர்மன் திருநாவுக்கரசுவும் அவரிடம் “நீங்க இறங்குங்க.. அவரு (நக்கீரன் கோபால்) எங்க கெஸ்ட், நீங்களும் கெஸ்ட்.. மேடையில் கெஸ்ட்டை வைத்துக்கொண்டு நீங்க இப்படி பேசக்கூடாது.” என்று குரல் கொடுக்க, “என்னால இனி பேச முடியாது. நான் கிளம்புறேன்..” என்று விறுவிறுவென்று மேடையிலிருந்து இறங்கினார். அப்போது கூட்டத்திலிருந்து “கை நீட்டி ரெண்டு லட்ச ரூபாய் வாங்கிட்டு எப்படி ஓடுறா பாருங்க.. சின்மயி யாருங்கிறது இப்ப தெரிஞ்சு போச்சு..” என்று விமர்சனம் எழ, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல்,  ஓட்டமும் நடையுமாக வேகத்தைக் கூட்டி மாயமானார்.” என்றார்.


சேவைக்காகவே தங்களை அர்ப்பணித்து வருபவர்கள் ஒன்றுகூடிய ரோட்டரி மாநாட்டின் மேடையை, தன் இஷ்டத்துக்குக் கிறுக்கி விளையாடும் ட்விட்டர் பக்கம் என்று நினைத்தாரா சின்மயி? 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிறப்பு விகிதத்தில் திரெளபதி குறித்து பேச்சு; சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Ajitpawar Talk about Draupathi in birth rate

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே அணியின் சிவசேனா கட்சி, காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ளன. அதே போல், மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் பா.ஜ.க, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை போட்டியிடவுள்ளன.

இந்த நிலையில், புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூர் பகுதியில் மருத்துவர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு அஜித் பவார் கலந்து கொண்டு பேசினார். அதில் பேசிய அவர், “மகாராஷ்டிராவில் உள்ள சில மாவட்டங்களில், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 850 பெண் குழந்தைகள் என்ற அளவில் பிறப்பு விகிதம் உள்ளது. மேலும், சில இடங்களில் 790 பெண்கள் என்ற அளவிலும் உள்ளன. இது மிகவும் பிரச்சனைக்குரிய விஷயம். இனி வரும் நாட்களில், ‘திரௌபதி’ பற்றி யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது. இதை நகைச்சுவையை பார்க்காதீர்கள். இல்லையேல் நாளை திரௌபதியை அவமதித்ததாக நான் விமர்சிக்கப்படுவேன்” என்று கூறினார்.

இந்து மத புராணக்கதையான மகாபாரத்தில் திரெளபதிக்கு, அர்ஜுன் உள்ளிட்ட 5 சகோதரர்கள் கணவர்களாக இருப்பதாக கதையில் இருக்கிறது. மகாராஷ்டிராவில் ஆண் குழந்தைகளுக்கு சம அளவில் பெண் குழந்தைகள் இல்லாததை திரெளபதியை ஒப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

அஜித் பவாரின் இந்த கருத்துக்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேந்த ஜிதேந்திர அவாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜிதேந்திர அவாத் கூறியதாவது, “மனதில் விஷம் இருந்தால், அவர் வாயிலிருந்து வேறு என்ன வெளிவரும்? திருமணங்கள் நடக்காது, கேள்விகள் எழும், பிரச்சனைகள் வரும் என்று இன்னொரு உதாரணம் சொல்லியிருக்கலாம். மகாராஷ்டிராவில், பிறப்பு விகித வேறுபாடு எப்போதும் நிலையாக இருந்ததில்லை. திடீரென்று, அவர் மனதிற்கு திரெளபதி தோன்றியுள்ளது.  ஒவ்வொரு முறையும் அவர் இப்படித்தான் பேசுவார். ஆனால், அதற்குண்டான விலையை  சரத் பவார் கொடுக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.

Next Story

காந்தி குறித்து சர்ச்சை பேச்சு; தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
Tamil Nadu Governor RN Ravi's explanation on Controversy about Gandhi

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாள் விழா கடந்த 23ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தமிழக ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதேபோன்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி பேசுகையில், “நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை.  நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜியே முக்கிய காரணம். இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947 இல் நாடு இரண்டாகப் பிரிந்தது. வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும்” எனப் பேசி இருந்தார். ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சு மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வந்தனர். 

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசப்பிதா மகாத்மா காந்தியை நான் அவமரியாதை செய்தேன் என்று கடந்த 3-4 நாட்களில் சில ஊடகங்கள் தவறான எண்ணத்தை உருவாக்க முயல்கின்றன. உண்மைக்கு அப்பால் எதுவும் இருக்க முடியாது. நான் மகாத்மா காந்தியை மிகவும் மதிக்கிறேன், அவருடைய போதனைகள் என் வாழ்க்கையின் இலட்சியங்களாக இருக்கின்றன. ஜனவரி 23, 2024 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்தநாளில் நான் பேசியதைத் தொடர்ந்து, சில ஊடகங்கள் என் பேச்சிற்கு ஒரு திருப்பம் கொடுத்தன. நமது தேசத்தின் சுதந்திரத்திற்கு நேதாஜியின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் போதுமான அளவு பாராட்டப்படவில்லை என்பதை எனது உரையில் விரிவாகக் கூற முயன்றேன்.

1947 ஆம் ஆண்டு சுதந்திரத்தின் வேகத்தையும், செயல்முறையையும் துரிதப்படுத்தியது பிப்ரவரி 1946 இல் ராயல் இந்தியன் கடற்படை மற்றும் விமானப்படையின் கிளர்ச்சிகள் ஆகிய இரண்டும் நேதாஜியால் ஈர்க்கப்பட்டவை என்று நான் ஒரு கருத்தை முன்வைக்க முயற்சித்தேன். பிப்ரவரி 1946 இல் கிளர்ச்சிகள் நடந்தன, அடுத்த மாதம் மார்ச் 1946 இல், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவதாகப் பகிரங்கமாக அறிவித்து, தங்கள் நேர்மையை வெளிப்படுத்தவும், கிளர்ச்சியடைந்த இந்தியர்களின் உணர்வுகளைத் தணிக்கவும், கிளர்ச்சிகளைத் தடுக்கவும் அரசியலமைப்பு சபையை அமைத்தனர். கடற்படை மற்றும் விமானப்படை கிளர்ச்சிகள் ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய தேசிய இராணுவத்தின் போர் உட்பட நேதாஜியின் புரட்சிகர நடவடிக்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டன. ஆகஸ்ட், 1942 இல் நடந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஆரம்ப வெற்றிக்குப் பிறகு, வலிமையை இழந்தது.

இந்தியப் பிரிவினைக்கான முஸ்லீம் லீக்கின் தீவிரமான வலியுறுத்தல் காரணமாக தேசிய சுதந்திர இயக்கத்தில் ஏற்பட்ட உள் மோதல்கள், உள் மோதல்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த காங்கிரஸ் தலைவர்களின் ஆற்றல்கள் ஆங்கிலேயர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஆங்கிலேயர்கள் இன்னும் சில ஆண்டுகள் இந்தியாவை ஆண்டிருக்கலாம். ஆனால் நேதாஜியின் ஆயுதப் புரட்சி, இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் மூலம் அவை தவிடுபொடியாக்கின. நான் கூறியது முதன்மை ஆவணங்களின் அடிப்படையிலான உண்மைகள். மகாத்மா காந்தியின் போதனைகள் என் வாழ்வின் வழிகாட்டியாக விளங்கிய அவரை நான் அவமதிக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.