சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையை முன்னிட்டு பலத்த பாதுக்காப்பு ஏற்பாடுகளை தமிழக பாதுகாப்பு அதிகாரிகளும், பிரதமர் அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து தீவிரப்படுத்திவருகின்றனர். இந்நிலையில் சீன அதிபர் வருகையையொட்டி 22 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/22475466.jpg)
சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கும் நிலையில் பாதுகாப்பு கருதி ஈஞ்சம்பாக்கம் முதல் புதுப்பட்டினம் வரையிலான 22 கிராம மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளஅர்ஜுனன் தபசு அருகேசந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பிற்காக தனியாக 6 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)