ஸ்ரீவில்லிபுத்தூர்பகுதிசைல்ட்லைன்உறுப்பினர் ஒருவரதுவாட்ஸ்-ஆப்நம்பருக்குகுழந்தைத் திருமண போட்டோ ஒன்றைஃபார்வேர்ட்செய்திருந்தார்கள்.சமூகநல விரிவாக்க அலுவலர் விசாரித்தபோது,ஸ்ரீவில்லிபுத்தூர்- மல்லி –மாயத்தேவன்பட்டியில்வசிக்கும் மணிகண்டன் - குமரி தம்பதியின் (தம்பதியின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) மகளுக்குத்தான் அப்படியொரு திருமணம் நடந்தது தெரியவந்திருக்கிறது.
சிவகாசியைச் சேர்ந்த சாமுவேல்,மினிபஸ்ஸில்செல்லும்போது முதலில் குமரியுடன் பழகியிருக்கிறான். பிறகு குமரியின் மகளான 7-வதுவகுப்பு படிக்கும் சிறுமி மீது சாமுவேலின் தவறான பார்வை படர்ந்திருக்கிறது. கடந்த 21-ஆம் தேதி, குமரியையும் அவருடைய மகளான சிறுமியையும் திருச்செந்தூர் அழைத்துச்சென்ற சாமுவேல், அங்குள்ளலாட்ஜில்வைத்து திருமணம் செய்திருக்கிறான். கொலை மிரட்டல் விடுத்ததாலேயே பயந்துபோய் குமரி இதற்குச் சம்மதித்திருக்கிறார். இந்த விவகாரம் அந்தச் சிறுமியின் தனதைமணிகண்டனுக்குதெரிந்து, சாமுவேல் மீது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதன்பிறகே, சிறுமியின் கழுத்தில் தான் கட்டியதாலியைக்கழற்றி எறிந்திருக்கிறான் சாமுவேல்.
சமூகநல விரிவாக்க அலுவலர் அளித்த புகாரின் பேரில்ஸ்ரீவில்லிபுத்தூர்அனைத்து மகளிர் காவல்நிலையத்தில்வழக்குப்பதிவாகி சாமுவேலைத் தேடிவருகின்றனர்.