பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 -ஆவது பிறந்தநாளும் 58 -ஆவது குருபூஜை தினமுமான இன்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மதுரை - கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினர்.

Advertisment

அதற்கு முன்னதாக மதுரைதெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர்கள் மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.கஅமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisment