தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞரின் 100வது பிறந்தநாள் விழா இன்று திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள கலைஞரின் சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு ஒரிசா கோரமண்டல் ரயில் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பயணிகளுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசு உயர் அதிகாரிகள், சென்னை மேயர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.