Chief Minister M.K.Stal's respect to the statue of Guru Anna

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 15) காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் காலை 10 மணியளவில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைக்கிறார்.

Advertisment

இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரம் சென்றுள்ளார். இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்த நாள் தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள காஞ்சிபுரம் மாநகராட்சி வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

அப்போது அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, காஞ்சிபுரம் மேயர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், காஞ்சிபுரம் துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.