Chief Minister M. K. Stalin's letter to the Union Minister of External Affairs!

Advertisment

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12/08/2022) கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள், ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், ஆகஸ்ட் 10- ஆம் தேதி அன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கையில் உள்ள திரிகோணமலை கடற்படைத் தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் என்றும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் இலங்கை அரசு விரைவில் விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.