Skip to main content

எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி சந்திப்பு  

Published on 16/02/2020 | Edited on 16/02/2020

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த எஸ்டிபிஐ நிர்வாகிகள் முதல்வர்களுடன் சந்திப்பு மேற்கொண்டு வருகின்றனர். 

 

 Chief Minister Edappadi meets with SDBI executives

 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி உடன்  எஸ்டிபிஐ நிர்வாகிகள் சந்திப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அதிமுக இணையாமல் வெற்றி சாத்தியமில்லை' - ஓபிஎஸ் பேட்டி

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
'Victory is not possible without ADMK alliance'-OPS interview

அதிமுக ஒன்றிணையாமல் வெற்றி சாத்தியமில்லை என  முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேசுகையில், 'விக்கிரவாண்டி தொகுதியில் இரண்டு இலைகளுடன் கூடிய மாங்கனி இருக்கிறது என வலியுறுத்திச் சொல்லி இருக்கிறேன். அதுதான் விக்கிரவாண்டியில் வெற்றி பெறப் போகிறது. அதிமுக என்பது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். எம்ஜிஆர், ஜெயலலிதாவும் தொண்டர்களை வைத்து இதை மாபெரும் இயக்கமாக உருவாக்கினார்கள். உறுதியாக ஒரு தொண்டன் அதிமுகவின் தலைமையை ஏற்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து. தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சரி செய்யாவிட்டால் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஓபிஎஸ் ஒருபோதும் அதிமுகவிற்கு உண்மையாக இருந்தது கிடையாது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு, ''நேற்று இதுகுறித்து நீண்ட விளக்கம் கொடுத்திருக்கிறேன். இதற்கு மேல் விளக்கம் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஏனென்றால் கட்சியின் நலன் கருதிப் பேசாமல் இருக்கிறேன். அவரைப்போல நான் தெனாவெட்டாகவோ, சர்வாதிகாரமாகவோ பேச மாட்டேன் என்பது நாட்டு மக்களுக்கும், கட்சித் தோழர்களுக்கும் தெரியும். இந்தச் சூழ்நிலையில் கட்சி இணைப்பதுதான் ஒரே வழி. நடைபெற இருக்கின்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்குப் பின்னர் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் கட்சி இணையாமல் சாத்தியமில்லை'' என்றார்.

Next Story

'வலியுறுத்தி எந்தப் பயனும் இல்லை; நமக்கு நாமே பாதுகாப்பு' - எடப்பாடி கண்டனம்

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
 We are our own security'-edappadi condemnation

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக பலரும் கருத்துக்கள் மற்றும் கண்டங்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றனர். ஏற்கெனவே கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்தும் தமிழக அரசின் சட்ட ஒழுங்கு குறித்தும் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி திமுகவிற்கு கண்டனங்களை தெரிவித்திருந்த நிலையில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லை எனச் சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார். அதற்கான பதிவில்,

'கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள்:

புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப்படுகொலை.

தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை.

தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.

இனி இந்தத் திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்தப் பயனும் இல்லை. எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன். திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு!' எனத் தெரிவித்துள்ளார்.