திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆற்காடு வீராசாமிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளபதிவில், “தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் ஆர்க்காட்டார். உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கழகப் பற்றாளர்.
எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர். என்றும் மானமிகு உடன்பிறப்பு மரியாதைக்குரிய அண்ணன் ஆர்க்காட்டார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.