Skip to main content

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை விவகாரம்;  தீட்சிதர்கள் மீது போலீசில் புகார்

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
Chidambaram Nataraja Temple Kanaka Sabha Issue Police complaint against Dikshidar

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய இரு திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு  மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து  டிசம்பர் 19 ஆம் தேதி வெள்ளி சந்திர பிரபை வாகன வீதிஉலா, டிசம்பர் 20 ஆம் தேதி தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதிஉலா, டிசம்பர் 21 ஆம் தேதி  வெள்ளி பூத வாகனத்தில் வீதிஉலா, டிசம்பர் 22 ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், டிசம்பர் 23 ஆம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலாவும், டிசம்பர் 24 ஆம் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடைபெற்றது.

அதே சமயம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று (25.12.2023)  முதல் 28 ஆம் தேதி வரை  பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கி இருந்து.  இந்த அரசு உத்தரவை மீறி கனசபை மீது பக்தர்களை ஏற விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாக  குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் கனசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுப்பதாக கூறி தீட்சிதர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறிய கோயில் தீட்சிதர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா புகார் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை; காவலர் கைது!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Mayiladuthurai Dt Perambur Police Station constable Thirunavukarasu incident

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் திருநாவுக்கரசு. இவர் அதே பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து சென்னையில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில், மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது தெரியவந்தது.

இதனையடுத்து காவலர் திருநாவுகரசை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான காவலர் திருநாவுக்கரசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். 

Next Story

ரவுடி திருவேங்கடத்தின் உடல் இன்று ஒப்படைப்பு!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
chennai thiruvenkadam Handover incident 

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 11 பேர் சரணடைந்த நிலையில் 11 பேரும் கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடி காவலில் விசாரணைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி ஆகிய 11 நபர்களும் போலீசார் கஸ்டடியில் எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் போலீசார் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்தப் போது நேற்று (14.07.2024) அதிகாலையில் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யவும், உடலை பெற்றுக்கொள்ளவும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் மறுப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக நீதிபதி தீபாவும், காவல்துறையினரும் நேற்று இரவு திருவேங்கடத்தின் குடும்பத்தினரிடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத்தொடர்ந்து திருவேங்கடத்தின் உறவினர் பிரேதப் பரிசோதனை செய்ய சம்மதம் தெரிவித்தனர். 

chennai thiruvenkadam Handover incident 

இதனையடுத்து அவரது உடல் நேற்று இரவு 10.30 மணி முதல் 12.00 மணி வரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் குடும்பத்தினரிடம் சிறிது நேரத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும் திருவேங்கடத்தின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படாமல் சென்னையிலேயே அடக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி திருவேங்கடத்தின் உறவினர்கள் இறுதி சடங்கிற்கு பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.