Skip to main content

மழை, புயல் போச்சு... மழைநீர் இன்னும் போகலையே! - வேதனையில் வில்லிவாக்கம் மக்கள் (படங்கள்)

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

Chennai villivakkam are affected nivar cyclone people suffer


'நிவர்' புயல் காரணமாக, சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. சில இடங்களில், 5 -ஆவது நாளான இன்றும், தண்ணீர் வடியாமல் இருக்கிறது. 


சென்னை, வில்லிவாக்கம் பகுதியில், பாடி மேம்பாலம் அருகே இருக்கும் அன்னை சத்தியா நகரில், 'நிவர்' புயல் காரணமாக, மழை நீர் முழங்கால் அளவிற்குத் தேங்கியுள்ளது. 5 நாட்கள் ஆகியும், இன்னும், மழை நீர் வடியாததால், அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புயல் கரையைக் கடந்த அன்று, நமது நிருபர் செய்தி சேகரிக்கச் சென்றபோது, அந்தப் பகுதிக்குள்ளே செல்ல முடியாத அளவிற்கு, மழை நீர் சூழ்ந்திருந்தது. மீண்டும் இன்று, (28ஆம் தேதி) அப்பகுதியின் நிலவரத்தை அறிய, நமது நிருபர் அப்பகுதிக்குச் சென்றார். ஆனால், இன்றும் அதே நிலைமையில்தான் வில்லிவாக்கம் அன்னை சத்தியா நகர் உள்ளது. 

 

Chennai villivakkam are affected nivar cyclone people suffer


மழைநீர் தேங்கியிருப்பது தொடர்பாக, அப்பகுதியில் உள்ள மாதா என்பவர், “நாங்க இப்போ இந்த தனியார் ஸ்கூல்லதான் தங்கியிருக்கிறோம். இதுவும் மழை நீர் வந்தவுடனே, இந்த ஸ்கூல் ஆளுங்க வந்து, எங்க ஸ்கூல்ல வந்து தங்கிக் கொள்ளுங்கள் என்றனர். அதன் பிறகுதான், கார்ப்ரேஷன் ஆளுங்கவந்து பார்த்தார்கள். அதன்பிறகு சாப்பாடு கொடுத்தார்கள். ஆனால், நாங்கள் அவர்களை எதிர்பார்க்கால், எங்க மக்களே சேர்ந்து, எந்தக் கட்சி வேறுபாடும் இல்லாமல் சாப்பாடு செய்து சாப்பிடுகிறோம். 

 

Chennai villivakkam are affected nivar cyclone people suffer

 

எங்க பகுதிக்குப் பின்னால் கொரட்டூர் ஏரி இருக்கு. அந்த ஏரியை முறையா பராமரிக்காமல் விட்டதால், அதில் இருந்து தண்ணீர் லீக் ஆகி, எங்கள் வீடுகளுக்குள்ள எல்லாம் வெள்ளம் வந்தது. அதுமட்டுமில்லாமல், அந்த ஏரி அருகில், ஒரு கால்வாய் இருக்கு. அதுல இருந்தும் தண்ணீர் லீக் ஆகித்தான் இங்கு இவ்வளவு வெள்ளம் இருக்கு. 

 

Chennai villivakkam are affected nivar cyclone people suffer


புயல் கரையைக் கடக்கின்ற அன்று காலை தி.மு.க. தலைவர் மட்டும் வந்து பார்த்துவிட்டு சில உதவிகள் செய்தார். வெள்ளம் வந்தபிறகு முதல்வர் எடப்பாடி பழனிசமாசியின் பி.ஏ. என ஒருவர் வந்து பார்த்துவிட்டுச் சென்றார். இன்றுவரையும் இந்தத் தனியார் பள்ளியில்தான் தங்கியிருக்கிறோம். பல்வேறு இடங்களில் எந்திரங்களைக் கொண்டு தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியெடுப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், எங்கள் பகுதியில் இன்னும் தண்ணீர் அப்படியேத்தான் இருக்கிறது. 

 

Chennai villivakkam are affected nivar cyclone people suffer


ஏற்கனவே கரோனா தொற்று ஒரு புறம் அனைவரையும் அச்சுருத்துகிறது. இதில், தொடர்ந்து 5 -ஆவது நாட்களாக, கழிவு நீருடன் சேர்ந்த இந்த வெள்ள நீரும் வடியாமல் இருப்பது இன்னும் பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்துமோ எனும் அச்சத்தைக் கூட்டியிருக்கிறது. குழந்தைகளை வைத்துக்கொண்டு இங்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறோம். தண்ணீர் தேங்கியிருப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிக்களும் வருகிறது. தண்ணீர் ஒரே இடத்தில் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது. உணவைக்கூட உட்கொள்ள முடியாமல் இருக்கிறோம். பெரியவர்கள் எப்படியோ சமாளித்துக் கொள்கிறோம். குழந்தைகளுக்கு அடிப்படை தேவையான குடிநீர், பால்கூட கிடைக்காமல் அவதிப்படுகிறோம். 

 

cnc


எங்களால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. எங்கள் துணிகளைக் கூட எங்களால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. யாராவது உதவி செய்தால் நல்லா இருக்கும்” என்றார் கண்ணீர் மல்க வேதனையோடு.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆஜரான மாவட்ட ஆட்சியர்கள்; விசாரணை இடத்தை மாற்றிய அமலாக்கத்துறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors present ed changed the place of investigation

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி, அரியலூர் ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா, கரூர் ஆட்சியர் தங்கவேல், திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (25.04.2024) காலை 10.30 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது மாவட்ட ஆட்சியர்களிடம் நுங்கம்பாக்கத்தில் மற்றொரு இடத்தில் உள்ள மண்டல கிளை அலுவலகத்திற்கு செல்லுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.