/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm new (3)_1.jpg)
சென்னை வடபழனியில் கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "மேலைநாடுகளை விட குறுகிய காலத்தில் கரோனாவில் இருந்து மக்களை மருத்துவர்கள் காப்பற்றியுள்ளனர். மிகச்சிறந்த மனிதவள கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளதால் நாட்டின் மருத்துவ தலைநகரமாக தமிழகம் உள்ளது. இந்தியாவிலேயே மருத்துவத் துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. அ.தி.மு.க. அரசு பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 11 புதிய மருத்துவ கல்லூரிகள் மூலம் கூடுதலாக 1,650 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன."இவ்வாறு முதல்வர் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)