
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில் சென்னையில் கருமேகம் சூழ்ந்து காணப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இன்று மாலை வேளையில் சென்னையின் மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் கருமேகங்கள் சூழ்ந்துள்ளதால் சென்னையில் அதிகப்படியான பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.