Skip to main content

பெண் என்ஜினீயர் 8வது மாடியில் இருந்து விழுந்த வழக்கில் திடீர் திருப்பம்...அதிர்ச்சி தகவல்!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

திருச்சியை சேர்ந்தவர் ஜூலியஸின் மகள் டேலிதா ஜூலியஸ் அவருக்கு வயது 24. சென்னையில் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே தற்கொலை செய்துகொண்டார் என்று செய்தி பரவியது. அப்போது இது பற்றி விசாரித்த போது, சென்னை தி.நகரில் வசித்து வந்துள்ளார். செப்டம்பர் 19ஆம் தேதி அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அன்று இரவு திடீரென அந்த நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

software engineer



தற்போது பெண் என்ஜினீயர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, டேனிதா ஜூலியஸ் மாரத்தான் போட்டியில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். பல்வேறு மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை போலீசாரிடம் அவரது பெற்றோர் காண்பித்துள்ளனர். மேலும் டேனிதா ஜூலியஸ், தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புவார். இதற்காக அவர், எங்கு சென்றாலும் ‘லிப்டை’ பயன்படுத்தாமல் படிக்கட்டுகளையே அதிகம் பயன்படுத்துவார் எனவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்த பிறகு டேனிதா ஜூலியஸ், சாப்ட்வேர் நிறுவன கட்டிடத்தின் மாடி படிக்கட்டுகளில் உடற்பயிற்சிக்காக ஏறி இறங்கியதும், இதில் அவர் நிலைதடுமாறி 8-வது மாடியில் இருந்து தவறிவிழுந்து பலியானதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னடர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கர்நாடக அரசு; எம்.என்.சி நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
 Action order for MNC companies and Karnataka Government giving priority to Kannadas

சமீபத்தில் பெங்களூரில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காததால், பெங்களூரில் உள்ள கன்னட மொழி இல்லாத பெயர்ப் பலகை கொண்ட வணிக நிறுவனங்களைக் குறிவைத்து கன்னட ஆதரவு அமைப்பினர் வன்முறை போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, வணிக நிறுவனங்களில் கன்னட மொழி உள்ள பெயர்ப் பலகையை வைக்க வேண்டும் என்ற அவசர சட்டத்தைக் கர்நாடகா அரசு கொண்டு வந்தது.

இதனிடையே, கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடம் தவிர பிறமொழி பேசுபவர்கள் தான், அதிகமாக வேலைக்கு எடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், கர்நாடகா இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், தங்கள் நிறுவனத்தில் எத்தனை கன்னடர்கள் பணிபுரிகிறார்கள் என்ற விவரத்தை அந்த நிறுவனங்களின் வரவேற்பு அறையில் காட்சி பலகையாக வைக்கும்படி கர்நாடகா அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக கலாச்சாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி கர்நாடக சட்டப்பேரவையில் பேசியதாவது, “கர்நாடகாவில் உள்ள நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகளின் பெயர்ப் பலகைகளில் 60 சதவீதம் கட்டாயம் கன்னட மொழியில் எழுதி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக கர்நாடக அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. கன்னட மொழி மற்றும் கன்னடர்களின் வளர்ச்சிக்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் கன்னடர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனைக் கண்காணிக்கும் வகையில், கர்நாடகா அரசு புதிய உத்தரவைக் கொண்டு வந்துள்ளது. அதில் கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் கன்னட ஊழியர்களின் எண்ணிக்கையை அந்தந்த நிறுவனங்கள் தங்கள் அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கைக்கு இணங்கத் தவறினால், அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் ரத்து செய்யப்படும். கன்னடர்கள் மற்றும் கன்னட மொழியின் நலனுக்கு எதிராகச் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் குறித்து ‘கன்னட காவல்’ என்ற செல்போன் செயலி மூலம் புகார் அளிக்கலாம்” என்று கூறினார். 

Next Story

மாணவியிடம் பேசிய கல்லூரி மாணவன் மீது தாக்குதல்;  போலீஸ் விசாரணை

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
beaten on college student who spoke to girl student

திருச்சி வயலூர் ரோடு ஜின்னா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது கர்சத் (வயது 20). இவர் கேகே நகரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் தனது நண்பர் ராகுல் என்பவருடன் திருச்சி வயலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி மையத்துக்கு சென்றார். அங்கே பயிற்சிக்கு வந்த மேரி என்ற மாணவியுடன் முகமது கர்சத் பேசியுள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த இன்னொரு மாணவர் எதற்காக அந்த மாணவியிடம் பேசுகிறாய் என்று தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாணவர் முகமது கர்சத்தை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பாண்டி சஞ்சய் மற்றும் சிலர் சேர்ந்து அவரை கல் மற்றும் கையால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து முகமது கர்சத் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.