Advertisment

இன்று நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல இடங்களிலும் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல் தமிழக அரசு சார்பிலும் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட அவர், சாதனையாளர்களுக்கு விருதுகளையும் வழங்கினார். அதேபோல் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாநகராட்சியின் மேயர் பிரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்து அரசுப் பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டார் மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.