பிரதமர் நரேந்திர மோடி கேட்டுககொண்டதன்படி இன்று மக்கள் சுய ஊரடங்கை கடைப்பிடித்துள்ளனர். இந்தியா முழுவதும் இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே யாரும் வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். அதன்படி இன்று சென்னையில் மக்கள் வீட்டிலேயே இருந்தனர். நகரின் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை கத்திரப்பாரா மேம்பாலம் எப்போதும் வாகனங்கள் சீறிப்பாய்ந்தப்படியே இருக்கும். இன்று சுயஊரடங்கையொட்டி வாகனங்கள் எதுவும் கண்ணில் படவில்லை.